இலங்கையின் 8ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று வியாழக்கிழமை நாடாளுமன்ற வளாகத்தில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.
நேற்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் 134 வாக்குகளை பெற்று இலங்கையின் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
உலகின் முதல் பெண் பிரதமரான சிறிமா பண்டாரநாயக்க 1960 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ஆம் திகதி பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்
அதேபோன்று ரணில் விக்கிரமசிங்க 1977 ஆம் ஆண்டு ஜூலை 21 ஆம் திகதி பாராளுமன்றத்திற்கு தெரிவானார் என்பவை இன்றைய நாளின் விசேட அம்சம் என்பது குறிப்பிடத்தக்கது.