யாழ்.மாவட்ட காணிப் பயன்பாட்டு திட்டமிடல் குழுக்கூட்டம்

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாண மாவட்ட காணிப்பயன்பாட்டு திட்டமிடல் குழுக்கூட்டமானது மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் நேற்று வியாழக்கிழமை மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இக் கலந்துரையாடலில் மாவட்ட காணிப்பயன்பாட்டு வலயமாக்கல் தயாரித்தல் செயற்திட்டத்தின் (2021) வரைபு திட்டத்தில் பங்குதாரர்களின் கருத்துக்கள் பெறப்பட்டதோடு,

மேலும் காணிகளை குத்தகைக்கு வழங்குதல், மருதங்கேணி J/428 பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தை அதன் சிறப்புக்களின் அடிப்படையில் காணிப்பயன்பாட்டு வலயமாக்கல் வரைவு மாதிரி தொடர்பான விடயங்கள், சுரமுகி கங்கா திட்டம், ஒரு இலட்சம் காணித்துண்டுகளை வழங்குவதற்கான ஏற்பாடுகள் மற்றும் இளம் தொழில் முயற்சியாளர்களுக்கு காணிகளை பிரித்து வழங்குதல் ஆகியன தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.

இக் கலந்துரையாடலில், மேலதிக அரசாங்க அதிபர் (காணி), மாவட்டச் செயலக திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட விவசாயப் பணிப்பாளர், உதவி மாவட்டச் செயலாளர், பிரதேச செயலாளர்கள், காணித் திட்டமிடல் உத்தியோகத்தர்கள் மற்றும் துறைசார் உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்.