-யாழ் நிருபர்-
வடக்கு கிழக்கு மீனவ சமூகத்தை உள்ளடக்கி சர்வதேச மீனவதினம் நேற்று வியாழக்கிழமை இரவு கடல் கடந்த தீவுகளில் ஒன்றான நயினாதீவில் உள்ள பொது மண்டபத்தில், மன்னார் சமூக பொருளாதார அபிவிருத்திக்கான அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
வடக்கு கிழக்கு சார்ந்து ஏழு மாவட்டங்களை உள்ளடக்கிய சுமார் 150 மீனவப் பிரதிநிதிகளை நயீனாதீவு மீனவ சங்கப் பிரதிநிதிகள் வரவேற்றனர்.
அதனைத் தொடர்ந்து மீனவ பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடலில் எமது கடல் வளத்தை பாதுகாப்போம் எதிர்கால சந்ததியினருக்கு எடுத்துச் செல்வோம் என்ற தொனிப் பொருளில் கலந்துரையாடல் இடம்பெற்றது.


