யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு கிழக்கு பகுதியில் வன்முறைக்குழு ஒன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு தாக்குதல் நடாத்தியுள்ளனர்
கைக் குழந்தைகளுடன் வீட்டில் இருந்த குடும்பத்தினர் மீது தாக்குதல் மேற்கொள்ளும் முயற்சியில் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.
வாள்கள், கத்தி, கற்களுடன் வருகை தந்த ஒரு குழுவினால் இந்த தாக்குதல் சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலின் போது வீட்டில் இருந்த உழவு இயந்திரம், வீட்டின் பொருட்கள், கதவுகள் என்பன சேதமாக்கப்பட்டுள்ளது.
இந்த வன்முறைக் குழுவினர் கட்டைக்காடு கிழக்கு பகுதியில் உள்ள மக்களை, மதுபோதையில் நீண்ட நாட்களாக அச்சுறுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
பாதிக்கப்பட்ட குடும்பஸ்தர் மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
சம்பவம் குறித்து விசாரணைகளை மருதங்கேணி பொலிசார் ஆரம்பித்துள்ளனர்