யாழ்ப்பாணம் வடமராட்சியில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டுள்ளது.
நெல்லியடிஇ புறாப்பொறுக்கிஇ ஆலடி எரிபொருள் நிலையத்துக்கு அண்மையில் உள்ள வெற்றுக் காணியிலிருந்து குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கரவெட்டி திடீர் மரண விசாரணை அதிகாரி வே.பாஸ்கரன் சடலத்தைப் பார்வையிட்டுப் பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்துச் சடலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், இறந்தவர் யார் என இதுவரை அடையாளம் காணப்படவில்லை.