-மூதூர் நிருபர்-
திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள பாட்டாளிபுரம் காட்டுப்பகுதியில் யானை தாக்குதலுக்குள்ளாகி இளம் குடும்பஷ்தர் ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை இரவுஉயிரிழந்துள்ளார்.
யானை தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்தவர் தோப்பூர் பாட்டாளிபுரத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான கந்தசாமி சுரேஷ் (வயது-37) என தெரியவருகிறது.
குறித்த நபர் யானை தாக்குதலுக்குள்ளாகி மூதூர் தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் மூதூர் பிரதேச வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளில் சம்பூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.