இரத்தினபுரி – உடவலவ, மஹார பகுதியில் நேற்று திங்கட்கிழமை இரண்டு யானை தந்தங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உடவலவ பகுதியை சேர்ந்த 35 வயதுடைய ஒருவரே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை உடவலவ பொலிஸார் நேற்று மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.