களுத்துறையில் மோட்டார் சைக்கிள் மோதியதில் பெண் ஒருவர் உயிரழந்துள்ளதுடன் மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் காயமடைந்துள்ளார்.
பேருவளை மக்கொனை பிரதேசத்தை சேர்ந்த 36 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
இவர் தாயின் இரத்த பரிசோதனைக்காக இரத்த மாதிரி ஒன்றுடன் வீதியைக் கடக்க முயன்ற போது பேருவளையிலிருந்து களுத்துறை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் மோதி 24.8 மீற்றர் முன்னோக்கி இழுத்து செல்லப்பட்டு இரும்பு வேலியில் மோதி விழுந்ததுடன் மோட்டார் சைக்கிள் 60 மீற்றர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்றவர் பொலிஸ் காவலில் களுத்துறை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் விபத்து தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கப்படுவதாக களுத்துறை பொலிஸார் தெரிவித்தனர்.