யாழ்ப்பாணம் – ஆவரங்கால் பகுதியைச் சேர்ந்த ஹரன் ரமின்ஷன் என்ற இளைஞன் மொடலிங் (Modeling) துறையில் சாதணை படைத்துள்ளார்.
இவர் கடந்த நவம்பர் மாதம் பிலிப்பைன்ஸ் மனிலா நகரில் நடைபெற்ற MISTER GLAM INTERNATIONAL 2025 Modeling போட்டியில் பங்கு பற்றியிருந்தார்.
குறித்த இளைஞன் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி இந்த போட்டியில் கலந்துகொண்டு, கனடா, லண்டன், மலேசியா, தாய்லாந்து, சிங்கப்பூர், ஜேர்மன், பிலிப்பைன்ஸ், யப்பான் என 35 ற்கும் மேற்பட்ட Modeling கலாச்சாரத்துடனான நாடுகளுடன் போட்டிபோட்டு Top -10ற்குள் தெரிவு செய்யப்பட்டு, இரண்டு பதக்கங்களை பெற்று இந்த சாதனையை நிலைநாட்டியுள்ளார்.
யாழில் நாளையதினம் சனிக்கிழமை இவருக்கான மாபெரும் கௌரவிப்பு நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.