-யாழ் நிருபர்-
இலங்கையைச் சேர்ந்த ஏழுபேர் நேற்று வெள்ளிக்கிழமை அகதிகளாக இந்தியா – இராமேஸ்வரம் பகுதியைச் சென்றடைந்தனர்.
இரண்டு குடும்பங்களை சேர்ந்த ஏழுபேர் ரூபா 2 இலட்சம் ரூபாவினை படகு ஒன்றிற்கு கொடுத்து, நேற்று நண்பகல் 12 மணியளவில் இலங்கையில் இருந்து புறப்பட்டு மாலை 5 மணியளவில் இந்தியாவை சென்றடைந்தனர்.
குறித்த ஏழுபேரும் வவுனியா – செட்டிக்குளம் பகுதியைச் சேர்ந்தவர்கள்.
இராமேஸ்வரம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.