இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் ஏப்ரல் 10 முதல் ஏப்ரல் 12 வரையிலான காலகட்டத்தில் ரூ. 163 மில்லியனுக்கும் அதிகமான வருவாய் ஈட்டப்பட்டதாக சாலை அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்த மூன்று நாள் காலகட்டத்தில் மொத்தம் 434,338 வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தியதாக அதன் பணிப்பாளர் நாயகம் அனுராதா ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
ஏப்ரல் 12 அன்று மட்டும் வருவாய் ரூ. 45 மில்லியனை எட்டியதாகச் சாலை அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்ததுள்ளது..
மேலும், அதிவேக நெடுஞ்சாலைகளில் ஏற்படும் அவசரநிலைகள் குறித்து அதன் 1969 என்ற அவசர உதவி எண்ணுக்குத் தெரிவிக்குமாறு வாகன ஓட்டிகளை அதிகார சபை கேட்டுக்கொண்டது.
