மூத்த மகன் என நினைத்து இளைய மகனை கொலை செய்த பெற்றோர்

இந்தியாவில் மூத்த மகனை கொலை செய்ய மேற்கொண்ட முயற்சியில் இளைய மகனை பெற்றோர் கொலை செய்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தெலுங்கானா மாநிலம் மஞ்சேரியல் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார், பத்மா தம்பதிகளே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த தம்பதிக்கு மது பழக்கம் இருந்த நிலையில் போதையில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த மூத்த மகன் அசோக் அவர்களை தட்டிக்கேட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த விஜயகுமார், பத்மா இருவரும் மூத்த மகன் அசோக்கை கொலை செய்ய முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், வீட்டில் 2 ஆவது மகன் சேகர் போர்வையை மூடியபடி தூங்கிக் கொண்டிருந்தார். மூத்த மகன் என நினைத்து 2 ஆவது மகன் சேகரின் கால்களை பத்மா பிடித்துகொள்ள விஜயகுமார் அரிவாளால் சேகரின் கழுததை அறுத்த நிலையில் சேகர் அலறி கூச்சல் இட்டபோதே படுத்திருப்பது சேகர் என்று தெரியவந்துள்ளது.

இதனையடுத்து அயலவர்கள் சேகரை வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும் சிகிச்சை பலன் இன்றி அவர் உயிர் இழந்துள்ளதுடன் குறித்த தம்பதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்