-மூதூர் நிருபர்-
மூதூர் பிரதேச செயலக பிரிக்குட்பட்ட, பல பொது அமைப்புக்கள் மற்றும் நிறுவனங்களுக்கு உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை மாலை மூதூர் பதில் பிரதேச செயலாளர் எம்.எச்.எம்.கனி தலைமையில் பிரதேச செயலக முன்றலில் நடைபெற்றது.
தேசிய காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் வை. எஸ். எம். ஸியாவின் பரிந்துரைக்க அமைய, திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி குழு இணைத் தலைவரும் , தேசிய காங்கிரஸ் தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எல். எம். அதாவுல்லாவின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் கொள்வனவு செய்யப்பட்ட உபகரணங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன.
இதன்போது, ஆலிம்சேனை முஸ்லிம் கலவன் பாடசாலை, ஆயிஸா வித்தியாலயம், மனாருல் ஹுதா அரபிக்கல்லூரி, மதனிய்யா அரபிக்கல்லூரி, நூரிய்யா அரபிக்கல்லூரி, ஹைரியா வித்தியாலயம், அல் பலாஹ் வித்தியாலயம், ரோயல் கனிஸ்ட பாடசாலை மற்றும் நஜீப் அப்துல் மஜீத் வித்தியாலயம் ஆகிய ஒன்பது கல்வி நிறுவனங்களுக்கு போட்டோ கொப்பி இயந்திரமும் தளபாடங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
முகைதீன் ஜும்மா சின்ன பள்ளிவாசல், தாருல் ஹுதா பள்ளிவாசல் மற்றும் சாபி நகர் ஜும்மா பள்ளிவாசல் ஆகிய வழிபாட்டு தளங்களுக்கு ஒலி பெருக்கி மற்றும் அதற்கான உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டதோடு, இமாம் சாபி நகர் வித்தியாலயத்திற்கு கணனி இயந்திரமும் அதற்கான தளபாடங்களும் வழங்கி வைக்கப்பட்டன.




மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
