-மூதூர் நிருபர்-
கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் “அழகான கடற்கரை கவர்ச்சிகரமான சுற்றுலாத்தளம்” எனும் தொணிப் பொருளின் மூதூர் பிரதேசத்திலுள்ள கடற்கரையை சுத்தம் செய்யும் நிகழ்வின் பிரதான நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை மூதூர் – ஹபீப் நகர் கடற்கரையில் மூதூர் பிரதேச செயலாளர் எம்.பீ.எம்.முபாறக் தலையில் இடம்பெற்றது.
மூதூரிலுள்ள கடற்கரைப் பகுதி 9 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு 12.5 கிலோ மீற்றர் தூரமுள்ள கடற்கரை பகுதியானது சிரமதானம் மூலம் துப்பரவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மூதூர் பிரதேச சபை, மூதூர் பிரதேச செயலகம் ஆகியன இணைந்து இவ் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.
மூதூர் வலயக் கல்வி அலுவலகம்,மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை,முப்படையினர்,மீன்பிடி திணைக்களம் , பிரதேச சமூக அமைப்புக்கள் என மூதூர் பிரதேசத்திலுள்ள சகல அரச நிறுவனங்களின் ஒத்துழைப்போடு சிரமதான நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் மூதூர் பிரதேச சபையின் மூதூர் பிரதேச செயலாளர், மூதூர் பிரதேச சபையின் செயலாளர்,மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி,பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, இராணுவ உயரதிகாரிகள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.