-மூதூர் நிருபர்-
மூதூர் தள வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதி உத்தியோகத்தர்கள் இன்று திங்கட்கிழமை பகல் 12.00 மணியளவில் வைத்தியசாலை வளாகத்தில் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.
2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் தாதியர் சேவைக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு தீர்வு கிடைக்கப் பெறவில்லை என தெரிவித்து இவ் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்ட தாதி உத்தியோகத்தர்கள் தமது கோரிக்கை அடங்கிய பதாகைகளையும் ஏந்தி இருந்தனர்.
போராட்டத்தில் கலந்து கொண்ட கிழக்கு மாகாண அரச தாதி உத்தியோகத்தர் சங்க தலைவர் எம்.எம்.பைஸாத் சம்பள அதிகரிப்பு ஏற்பட்டாலும் தமது கோரிக்கை நிறைவேற்றப்படவில்லையென ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.