திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் தங்களின் விவசாய நிலங்களை அபகரித்து தனியார் கம்பனிகளுக்காக சூரிய மின் சக்தி திட்டத்துக்கு வழங்கப்பட்டதையடுத்து இன்று புதன்கிழமை திருகோணமலை மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மக்கள் போராட்ட முண்ணனியின் செயற் குழு உறுப்பினர் வசந்த முதலிகே உட்பட விவசாய சம்மேளனங்களின் பிரதிநிதிகள் முத்து நகர் விவசாயிகளும் கலந்து கொண்டு தங்களது அபகரிக்கப்பட்ட விவசாய காணிகளை மீட்டு தருமாறு போராட்டத்தில் பதாகைகளை ஏந்தியவாறு ஈடுபட்டிருந்தனர்.
இதன் போது கருத்துரைத்த விவசாயிகள் தற்போது மழை ஆரம்பிக்கவுள்ள நிலையில் விவசாய செய்கைக்கான தயார் நிலைபடுத்த வேண்டியுள்ளது மாவட்ட செயலக ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் போது நிலங்களை தருவதாக சோளர் திட்டம் இல்லாத நிலங்களில் விவசாய செய்கை ஆரம்பிக்க முடியும் என கூறிவிட்டு தொடர்ந்தும் கம்பனிகளுக்கு விளை நிலத்தை வழங்குகின்றனர் .
மேலும் குறித்த போராட்டத்தை தொடர்ந்து உண்ணாவிரத போராட்டம் நடாத்தவுள்ளதாக போராட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர்










