-மூதூர் நிருபர்-
தோப்பூர் -றோயல் கனிஷ்ட பாடசாலைக்கு 1 ஆம் தரத்திற்கு மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் கே.எம்.மர்சூக் தலைமையில் இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்றது.
இதன்போது புதிய மாணவர்கள் 2 ஆம் தர மாணவர்களினால் மாலை அணிவிக்கப்பட்டு மகிழ்ச்சிகரமாக வரவேற்கப்பட்டனர்.
இந் நிகழ்வில் முதன்மை அதிதியாக தேசிய காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளர் வைத்தியர் வை.எஸ்.எம்.சியா கலந்து சிறப்பித்தார்.
“பாடசாலை கல்விக்கு மகிழ்ச்சிகரமான ஆரம்பம்” எனும் தொணிப் பொருளின் கீழ் நாடளாவிய ரீதியில் உள்ள சகல பாடசாலைகளிலும் இன்றைய தினம் 1 ஆம் தரத்திற்கு மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டமை குப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்










