
முட்டை சைவமா? அசைவமா? யாரெல்லாம் முட்டை சாப்பிட கூடாது தெரியுமா?
சைவ உணவு விரும்பிகள் மற்றும் அசைவ உணவு உண்போர் இருவரும் தனி தனியாக அவர்களது வாதங்களை முன்வைக்கின்றனர். ஆனாலும் முட்டை சைவமா அசைவமா என்று பதில் கிடைக்கவில்லை.
உலகில் பல அடிப்படை கேள்விகள் இன்றும் விடை காணாத நிலையில் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் “முட்டை சைவமா அசைவமா? ” என்ற கேள்வி. முட்டையில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் இருந்தபோதிலும், இது எந்த வகை உணவு என்பது குறித்து மக்களிடையே இன்றும் குழப்பம் நிலவுகிறது. சைவ உணவு விரும்பிகள் மற்றும் அசைவ உணவு உண்போர் இருவரும் தனி தனியாக அவர்களது வாதங்களை முன்வைக்கின்றனர். ஆனாலும் முட்டை சைவமாக அசைவமா என்று பதில் கிடைக்கவில்லை. அந்த வரிசையில் முட்டை சைவமா அசைவமா என்பது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
முட்டையின் இரண்டு வகைகள்:
- கருவுற்ற முட்டைகள் (Diploid Eggs):
இந்த கருவுற்ற வகை முட்டையில் தான் உயிர் உண்டு. கோழிகள் இவற்றை அடை காத்து குஞ்சாக்குகின்றன. நாம் வீட்டில் சமைத்து சாப்பிடும் முட்டைகள் இந்த வகையில் சேராது.
- கருவுறா முட்டைகள் (Haploid Eggs):
இந்த கருவுறா வகை முட்டையில் உயிர் இல்லை. கடைகளில் விற்கப்படும் முட்டைகள் இந்த வகையைச் சேர்ந்தவை. இவற்றைத்தான் நாம் உண்கிறோம்.
இந்த நிலையில் 2004 ஆம் ஆண்டில் இந்திய உச்சநீதிமன்றம் ஒரு முக்கியமான தீர்ப்பை வழங்கியது. கருவுறா முட்டைகள் சைவ உணவு தான் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த முடிவு ஆழ்ந்த ஆராய்ச்சிக்குப் பின்னர் எடுக்கப்பட்டது. முட்டையின் வெள்ளைப் பகுதியில் எந்த விலங்கு செல்களும் இல்லை என்பதே இதற்குக் காரணம்.
மஞ்சள் கருவின் நிலை:
முட்டையின் மஞ்சள் கரு கொழுப்பு மற்றும் புரதங்கள் நிறைந்தது. இதில் கியூம செல்கள் இருக்கக்கூடும் என்பதால், இது அசைவ வகையில் சேர்க்கப்படுகிறது. எனவே, வெள்ளைப் பகுதி மட்டும் சைவம், மஞ்சள் கரு அசைவம் என்றும் சிலர் கூறுவது உண்டு.
முட்டையின் ஆரோக்கிய நன்மைகள்:
முட்டை சைவமா அசைவமா என்பதை விட அதன் ஆரோக்கியப் பயன்கள் தான் நம் உடலுக்கு முக்கியம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை முட்டையை விரும்பி சாப்பிடுவார்கள். நாம் வீட்டில் சமைக்கும் காய்கறி முதல் கேக் பிஸ்கட் போன்ற பல உணவுகளில் முட்டை சேர்த்து சமைக்கிறோம். ஒரு சில சைவ உணவு சாப்பிடுபவர்கள் கூட உடல் ஆரோக்கியத்திற்காக முட்டை சாப்பிட துவங்கி விட்டனர். ஏனெனில் முட்டையில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளது.
புற்றுநோய் தடுப்பு: முட்டை சாப்பிடுவது மார்பக புற்றுநோய் வருவதைத் தடுக்க உதவுகிறது.
அழகு பராமரிப்பு: கந்தகம் மற்றும் வைட்டமின் B12 நிறைந்த முட்டை முடி மற்றும் நகங்களுக்கு சிறந்தது.
உடல் எடை கட்டுப்பாடு: தினமும் காலையில் ஒரு முட்டை சாப்பிடுவது உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. ஜிம்மிற்கு செல்லும் நபர்கள் கூட புரதச்சத்துக்காக முட்டை சாப்பிடுவார்கள். புரத சத்தின் சிறந்த மூலம் இந்த முட்டை.
அந்த வரிசையில் முட்டை ஒரு சக்திவாய்ந்த ஊட்டச்சத்து மூலம். இது சைவம் அல்லது அசைவம் என்பதை விட அதன் ஆரோக்கியப் பலன்களே முக்கியம். உங்கள் உணவில் முட்டையை சேர்த்துக்கொள்வது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்