பொலன்னறுவை, மன்னம்பிடிய நகருக்கு அருகில் இரண்டு முச்சக்கர வண்டிகள் மோதி கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.
கதுருவெல நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி மற்றொரு முச்சக்கர வண்டியை முந்திச் செல்ல முயன்ற போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
முச்சக்கர வண்டிகளில் பயணித்த மூன்று வயது சிறுமி உட்பட ஆறு பேர் காயமடைந்து பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வெசாக் தினத்தை கொண்டாடுவதற்காக பொலன்னறுவை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த ஹசலக மற்றும் திம்புலாகல பகுதிகளைச் சேர்ந்த குழுவினரே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக மன்னம்பிட்டிய பொலிஸார் கூறுகின்றனர்.