களுத்துறையில் முச்சக்கர வண்டியொன்றில் பத்து ஆடுகளை கடத்திச் சென்ற இரண்டு நபர்களை பண்டாரகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட பத்து ஆடுகளில் ஒன்று இறந்துவிட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீல நிற முச்சக்கர வண்டியில் ஆடுகள் சட்டவிரோதமாக கொண்டு செல்லப்படுவதாக பண்டாரகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பு நடவடிக்கையின் போது வீடகம பகுதியில் இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பொலிஸார் மேற்கொண்ட சோதனையில் முச்சக்கர வண்டியின் பின்புறத்தில் ஒன்றின் மேல் ஒன்றாக 10 ஆடுகள் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.