-மஸ்கெலியா நிருபர்-
மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள சாமிமலை டீ சைட் காட்மோர் நெடுஞ்சாலையில் நேற்று திங்கட்கிழமை மாலை முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியது.
இச் சம்பவத்தில் இருவர் காயமடைந்த நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் வெளி நோயாளர் பகுதியில் சிகிச்சை பெற்று வெளியேறி உள்ளனர்.
முச்சக்கரவண்டி பலத்த சேதமடைந்துள்ளது.
