அநுராதபுரம் பகுதியில் முச்சக்கர வண்டியில் போதைப்பொருட்களை கொண்டு சென்ற சந்தேக நபரை அநுராதபுரம் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அநுராதபுரம், திசாவெவ பகுதியை சேர்ந்த 41 வயதுடையவரே இதன் போது கைது செய்யப்பட்டுள்ளார்.
அநுராதபுரம் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த தகவலொன்றுக்கமைய நேற்று சனிக்கிழமை அநுராதபுரம் பொலிஸ் பிரிவின் நீராவிய பகுதியில் நடத்திய சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது, 101 கிராம் 20 மில்லி கிராம் நிறையுடய ஹெரோயின் போதைப் பொருட்களை கைப்பற்றியுள்ளதுடன், முச்சக்கர வண்டியையும் கைப்பற்றியுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர் அநுராதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.