மோட்டார் போக்குவரத்து திணைக்களம் நாளை வியாழக்கிழமை முதல் முச்சக்கர வண்டிகளுக்கான விசேட வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளது.
பெற்றோலில் இயங்கும் முச்சக்கர வண்டிகளை மின்சார முச்சக்கர வண்டிகளாக மாற்றுவதற்கான முன்னோடி வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.
முன்னோடி திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 300 பெற்றோலில் இயங்கும் முச்சக்கர வண்டிகளை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்