மலையக பகுதிகளில் ஏற்பட்ட மண்சரிவுகளால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து அகதி முகாம்களில் வாழும் குடும்பங்களுக்கு விரைவாக வீடுகள் வழங்கப்படும் என பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.
இவர்களுக்கென வீடுகளை நிர்மாணிக்கும் பணிகள், எதிர்வரும் மார்ச் முதல் வாரத்தில் முன்னெடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சில் நேற்று திங்கட்கிழமை அமைச்சின் செயலாளர்கள் மற்றும் முப்படை அதிகாரிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலிலே அமைச்சர் இவ்விடயத்தைக் குறிப்பிட்டுளார்.