-பதுளை நிருபர்-
மஹியங்கனை சொரபொர வாவியில் மீன்பிடிக்கச் சென்றவர் நீரில் மூழ்கி இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தெஹிகொல்ல, சொரபொர வெவ பகுதியை சேர்ந்த 65 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர் மீன்பிடிக்கச் சென்ற போது வாவியில் தவறி விழுந்ததாக கிடைத்த தகவலின் பேரில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது இன்று அதிகாலை 2.30 மணியளவில் நீரில் மூழ்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மஹியங்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.