மின் கம்பத்தில் ஏறிய இளைஞர் உயிரிழப்பு
இந்தியாவில் ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அருகே இன்று வியாழக்கிழமை அதிகாலை மின் கம்பிகளை திருட கம்பத்தில் ஏறிய இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞர் மீது மின் கம்பி திருட்டு தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், சில காப்பர் மின் கம்பிகளை அவர் வெட்டி திருடியதாகக் கூறப்படுகிறது.
மேலும் திருடுவதற்காக மற்றொரு மின் கம்பத்தில் ஏறியபோது, உடலில் மின்சாரம் பாய்ந்ததால், மின் கம்பத்தில் தொங்கிய நிலையில் அவர் இறந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்