-பதுளை நிருபர்-
மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி மூன்று பேர் ஹப்புத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பதுளை பகுதியில் நேற்று திங்கட்கிழமை மாலை பெய்த இடி மின்னலுடன் கூடிய கடும் மழையின் காரணமாக, ஹப்புத்தளை தம்பேதன்ன பகுதியில் மின்னல் தாக்கி, தம்பேதன்ன மாகந்த பிரிவை சேர்ந்த 21, 42, 17 வயதுடைய மூவர் ஹப்புத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவர்கள் மூவரும் ஆபத்தான நிலையில் இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்