அம்பாந்தோட்டை – சூரியவெவ ரண்தியகம வீரியகம பகுதியில் மின்சாரம் தாக்கி தாய் மற்றும் மகன் உயிரிழந்துள்ளனர்.
வீரியகம பகுதியை சேர்ந்த 38 வயதுடைய தாயும் அவரது 5 வயது மகனுமே இவ்வாறு உயிர் இழந்துள்ளனர்.
வீட்டின் பின்புறம் கட்டப்பட்டுள்ள வெதுப்பகத்தின் பாதுகாப்புக்காவும், நிறுத்தப்பட்டிருந்த சிறிய பாரவூர்த்தியின் பாதுகாப்புக்காகவும் பயன்படுத்தப்பட்ட மின்சார வேலியில் நேற்று புதன்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் சிறுவன், சிக்கியுள்ளார்.
சிறுவனை தேடிக்கொண்டிருந்த தாய், வீட்டின் பின்புறம் சிறுவன் மின்சார வேலியில் சிக்கியிருப்பதைக் கண்டு காப்பாற்ற முயற்சி செய்துள்ளார்.
சிறுவனை மீட்க முயன்றபோது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலே தாயும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூரியவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.