மினுவங்கொடை, பந்தண்டுவன பகுதியில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு உறுப்பினர் கெஹெல்பத்தர பத்மேவுக்கு நெருக்கமான ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் பிரவேசித்த மோட்டார்சைக்கிள் கம்பஹா பிரிவு குற்ற விசாரணை பணியகத்தினால் மினுவாங்கொட – யட்டியன பகுதியில் உள்ள மைதானமொன்றுக்கு அருகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில், குறித்த மோட்டார்சைக்கிள் உரிமையாளர் எனக் கூறப்படும் பெண்ணும் குற்றச்செயலுக்காக அந்த மோட்டார்சைக்கிளை பெற்றுக்கொடுத்த நபரும் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.