கம்பகா – மினுவங்கொடை, பத்தண்டுவன பகுதியில் இன்று காலை 11 மணியளவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் நபரொருவர் காயமடைந்துள்ளார்.
கொட்டகம முதியான்சலாகே லஹிரு ரந்தீர் காஞ்சன (வயது – 36) என்ற முச்சக்கர வண்டி ஓட்டுநர் ஒருவரே இச்சம்பவத்தில் காயமடைந்துள்ளார்.
உந்துருளியில் பயணித்த இருவரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
காயமடைந்த நபர் சிகிச்சைக்காக மினுவங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கம்பஹா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களைக் கைது செய்ய மினுவங்கொடை காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.