களுத்துறை – மித்தெனிய முக்கொலை சம்பவத்துக்கு உதவியதாக மேலும் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குட்டிகல, பதலங்கல பகுதியைச் சேர்ந்த 39 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குட்டிகல – பதலங்கல பகுதியில் நடத்தப்பட்ட தேடுதலின் போது குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
குறித்த முக்கொலை சம்பவத்துடன் தொடர்புடைய 11 சந்தேக நபர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை இந்த சம்பவம் தொடர்பில் மித்தெனிய காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.