தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தனின் பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் இரத்ததான நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த இரத்ததான நிகழ்வில் கட்சியின் செயலாளர் மற்றும் கட்சியின் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
மேலும் பல இரத்த கொடையாளர்கள் கலந்து கொண்டு இரத்த தானம் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.