மாணவர்களை மணிக்கணக்காக காக்க வைத்த சஜித் பிரேமதாச

-யாழ் நிருபர்-

 

சஜித் பிரேமதாச யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள நிலையில் பல்வேறு நிகழ்வுகளில் பங்குபற்றி வருகின்றார்.

அந்தவகையில் இன்று புதன்கிழமை சுழிபுரம் விக்டோரியா கல்லூரிக்கு பேருந்து கையளிக்கும் நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த நிகழ்வு பி.ப 2.00 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் மாணவர்கள் இரண்டு மணிக்கு முன்னர் குறித்த நிகழ்வுக்கு தயாராக இருந்தனர்.

இருப்பினும் ஏற்பாடு செயாயப்பட்ட நேரத்தில் இருந்து சுமார் ஒன்றரை மணிநேரத்துக்கு பின்னரே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் குறித்த நிகழ்வுக்கு வருகை தந்திருந்தார்.

இதனால் மாணவர்கள் நீண்ட நேரம் காத்திருந்து சோர்வடைந்திருந்ததை அவதானிக்க முடிந்தது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க