மஹா ஓயா, கெகிரிஹேன பிரதேசத்தில் 19 வயதுடைய மாணவன் ஒருவரை தாக்கியதாக தெரிவித்து சந்தேகத்தின் பேரில் மூன்று பாடசாலை ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தாக்குதலுக்கு உள்ளான மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மாணவனின் தாய் இது தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மஹா ஓயா பொலிஸாரினால் ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகளின் போது, குறித்த மாணவனின் பாடசாலையின் ஆசிரியர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள் மஹாஓயா பதியத்தலாவை வசிப்பிடமாக கொண்ட, 34, 37 மற்றும் 43 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்கள் இன்று வெள்ளிக்கிழமை தெஹியத்தகண்டிய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.