கட்டாக்காலிகளாக வீதிகளில் உலாவித் திரிந்த 12 மாடுகளை மூதூர் பிரதேச சபையினால் இன்று வியாழக்கிழமை பிடிக்கப்பட்டு அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.பிரகலாதன் தெரிவித்தார்.
மூதூர் பிரதேச சபையினால் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு இணங்க கட்டாக்காளிகளாக உலாவித் திரிந்த மாடுகளே இவ்வாறு பிடிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பிடிக்கப்பட்ட மாடுகள், மாட்டு உரிமையாளர்களிடமிருந்து தண்டப்பணம் அறவிடப்பட்ட பின்னரே விடுவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் அடைத்து வைக்கப்பட்ட மாடுகளை தவிசாளர்இ உதவித் தவிசாளர் பீ.டி.பைஸர்இ உறுப்பினர் எம்.டி.தாஹிஸ்இ சபையின் செயலாளர் ஜம்சீத் ஆகியோர் இன்று பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.