-மஸ்கெலியா நிருபர்-
கெனேடிய நாட்டின் பிரதிநிதிகள் மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா இராஜ்குமார் மற்றும் உப தவிசாளர் பரமசிவம் ராஜ் அசோக் அதன் செயலாளர் எஸ்.ராஜவீரன் மற்றும் பணியாளர்களை நேற்று திங்கட்கிழமை சந்தித்தார்கள்.
சந்திப்பின் போது மஸ்கெலியா பிரதேச சபைக்கு உரித்தான விளையாட்டு திடலை அபிவிருத்தி செய்ய ஒரு கோடி நாற்பது லட்சம் ரூபாய் செலவில் அபிவிருத்தி செய்ய முன் வந்து உள்ளனர்.
இந்த வேலை திட்டம் எதிர் வரும் டிசம்பர் 15 ஆரம்பிக்க பட்டு 2026 ஜூன் நடுப்பகுதியில் மீண்டும் சபைக்கு கையளிக்க படும் என்றனர்.
தற்போதைய காலத்திற்கு ஏற்ப விளையாட்டு திடலை அபிவிருத்தி செய்ய உள்ளதாக கனேடிய நாட்டில் இருந்து வந்தவர்கள் தெரிவித்தார்.