மறைந்த மூத்த பத்திரிகையாளர் இராசநாயகம் பாரதிக்கு இன்று சனிக்கிழமை மட்டு ஊடக அமையத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
மட்டு ஊடக அமையம், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், கிழக்கிலங்கை பத்திரிகையாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று காலை 10.30 மணியளவில் மட்டு ஊடக அமையத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இடம்பெற்றது.
நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இளையதம்பி சிறிநாத், முன்னாள் மாகாண சபை பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், சமூக செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.