மருத்துவ பீட மாணவர்கள் மீது தாக்குதல்

கொழும்பு – விகாரமஹாதேவி பூங்காவிற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மருத்துவ மாணவர்களை கலைப்பதற்காக பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

நாட்டில் தனியார் மருத்துவக் கல்லூரிகளை நிறுவுவதற்கும், தேசிய வணிக முகாமைத்துவ நிறுவக (NSBM) மருத்துவ பீடமொன்றை நிறுவுவதற்கும் எதிர்ப்புத் தெரிவித்து மருத்துவ பீட மாணவர்களினால் இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது பொலிஸாரினால் இவ்வாறு நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்