மரமொன்றில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு
-யாழ் நிருபர்-
யாழ்.சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இணுவில் பகுதியில், தூக்கில் தொங்கிய நிலையில், இளைஞனின் சடலம் இன்று புதன்கிழமை மீட்கப்பட்டுள்ளது.
செட்டி வீதி-இணுவில் மேற்கு பகுதியைச் சேர்ந்த அமுதலிங்கம் நிவேதன் (வயது 31) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞன் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு வீட்டின் முன்புறம் உள்ள காணியில் இருந்துள்ளார், இதன்போது இரவு உணவுக்காக அவரது தாயார் குறித்த இளைஞனை அழைத்துள்ளார்.
சற்று நேரத்தில் வருவதாக தெரிவித்த இளைஞன், நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு செல்லவில்லை, அதன்பின் வீட்டில் இருந்தவர்கள் இளைஞனின் கைத்தொலைபேசிக்கு அழைப்பை எடுத்துள்ளனர், ஆனால் அவரின் கைத்தொலைபேசி வேலை செய்யவில்லை.
இந்நிலையில், குறித்த இளைஞன் இன்று காலை வீட்டின் முன்னால் உள்ள காணியில் மரம் ஒன்றில் தூக்கில் தொங்கியவாறு சடலமாக காணப்பட்டார்.
இளைஞனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக, உறவினர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
சுன்னாகம் பொலிஸார் நீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ், விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்