மரதன் போட்டியில் போட்டியாளர்களை ஊக்குவித்த பாடசாலை மாணவன்: தாக்குதலுக்கு இலக்காகி பலி

வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் தாக்குதலுக்கு இலக்கான பாடசாலை மாணவன் 4 மாதங்களின் பின்னர் உயிரிழந்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் இந்த மாணவன் குறித்த பகுதியில் இடம்பெற்ற மரதன் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்ட போட்டியாளர்களை ஊக்குவிக்கச் சென்ற போது ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை அடுத்து தாக்கப்பட்டு பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்று முன் தினம் வெள்ளிக்கிழமை உயிரிழந்ததாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

குறித்த தாக்குதல் தொடர்பில் நான்கு பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரவித்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்