மன்னார் பெரியகடை மீனவ கூட்டுறவு சங்கத்தின் 30 ஆவது ஆண்டு நிறைவு விழா

-மன்னார் நிருபர்-

மன்னார் மட்டுப்படுத்தப்பட்ட பெரியகடை மீனவ கூட்டுறவு சங்கத்தின் 30 ஆவது ஆண்டு விழா நேற்று வியாழக்கிழமை காலை 11 மணியளவில் மன்னார் பெரிய கடையில் அமைந்துள்ள மீனவ கூட்டுறவு சங்க கட்டிடத்தில் இடம் பெற்றது.

பெரிய கடை மீனவ கூட்டுறவு சங்கத்தின் தலைவர் கே.கிறிஸ்டின் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் விருந்தினர்களாக மன்னார் பிரதேசச் செயலாளர் எம்.பிரதீப்,மன்னார் மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் ரி.வித்தக கலாநிதி,உதவி கடற்றொழில் பணிப்பாளர் வி.கலிஸ்டன்,மாவட்ட கடற்தொழில் உத்தியோகத்தர் எஸ்.பவாநிதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டதோடு, விருந்தினர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்