நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாகப் பல பகுதிகளுக்கான போக்குவரத்து நடவடிக்கைகள் முற்றாகத் தடைப்பட்டுள்ளன.
இதன்படி மன்னார் மாவட்டத்திலிருந்து வெளி மாவட்டங்களுக்கான அனைத்து வீதிகளுடனான போக்குவரத்தும் முற்றாகத் தடைப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட இடர் முகாமைத்துவ பணிப்பாளர் கனகரத்னம் திலீபன் தெரிவித்துள்ளார்.