1996 ஆம் ஆண்டு மத்திய வங்கி குண்டுவெடிப்பு வழக்கில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி செல்லையா நவரத்தினத்திற்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
1996 ஆம் ஆண்டு 91 உயிரிழந்த மத்திய வங்கி குண்டுவெடிப்பில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதை அடுத்து செல்லையா நவரத்தினம் 200 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார்.
செல்லையா நவரத்தினத்தின் நன்னடத்தைக்காக ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியதாக இலங்கை சிறைச்சாலைகள் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த மற்றுமொரு தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவருக்கும் ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட அதிகாரி மேலும் தெரிவித்தார்.
56 வயதான எஸ்.சண்முகராஜாஇ விடுதலைப் புலிகளுக்கு பொருட்களை கடத்திய குற்றச்சாட்டில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்தார்.
இரண்டு ஜனாதிபதி மன்னிப்புக்களும் ஜூலை 18இ 2023 முதல் அமுலுக்கு வருவதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி மேலும் தெரிவித்தார்.