மண்ணெண்ணெய் லீற்றருக்கு 370.00 ரூபாவாக அதிகரிக்கப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது ஒரு லிற்றர் மண்ணெண்ணெய் 87.00 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஒரு லீற்றர் மண்ணெண்ணெக்கு 283.00 ரூபா நட்டத்தைச் சந்தித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் மண்ணெண்ணெய் லீற்றருக்கு 370.00 ரூபாவாக அதிகரிக்கப்படும் என கூட்டுத்தாபன அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
குறைந்த வருமானம் பெறுவோருக்கு தெரிவு செய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக சலுகை விலையில் மண்ணெண்ணெய் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.