-நானுஒயா நிருபர்-
மஹியங்கனை பகுதியிலிருந்து தலவாக்கலை பகுதிக்கு மணல் ஏற்றிச்சென்ற லொறி கட்டுப்பாட்டை இழந்து வீதியில் குடைசாய்ந்து இன்று திங்கட்கிழமை அதிகாலை விபத்துக்குள்ளாகியுள்ளது.
நானுஓயா டெஸ்போட் பகுதியில் அதிகாலை 4 மணியளவில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தினால் நுவரெலியா – தலவாக்கலை ஏ – 7 பிரதான வீதி ஊடான போக்குவரத்து ஒரு மணித்தியாலம் பாதிக்கப்பட்டது. எனினும் பிரதேசவாசிகளின் ஒத்துழைப்புடன் வீதியில் கொட்டிய மணல் அகற்றப்பட்டு போக்குவரத்து வழமைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
விபத்து சம்பவித்த போது லொறியில் சாரதி மட்டும் பயணித்துள்ளதாகவும், அவர் தெய்வாதீனமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளதாகவும், லொறியில் திடீரென ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக சாரதிக்கு வாகனத்தை கட்டுப்படுத்த முடியாத காரணத்தால் வீதியில் குடைசாய்ந்துள்ளது எனவும் இதனால் லொறியில் இருந்த 3 கியூப் மணலில் 1 கியூப் மணல் வீதியில் கொட்டியதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.