-மூதூர் நிருபர்-
மூதூர் – மணற்சேனை பகுதியில் தைப்பூசத்தை முன்னிட்டு பாரம்பரிய முறையிலான புதிர் அறுவடை விழா இன்று செவ்வாய்கிழமை காலை மிக சிறப்பாக இடம் பெற்றது.
மூதூர் – மணற்சேனை சிறி சித்திவிநாயகர் ஆலய நிருவாகமும், கிராம மக்களும் இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்வில் மாட்டு வண்டில்கள் அலங்கரிக்கப்பட்டு அதில் நெற்கதிர்கள் எடுத்து வரப்பட்டன.
இதன்போது அதிகளவான பொதுமக்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.