மட்டக்களப்பு மகாஜனக்கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டு போட்டி நிகழ்வு நேற்று சனிக்கிழமை வெபர் மைதானத்தில் இடம்பெற்றது.
கல்லூரியின் அதிபர் எஸ்.சாந்தகுமார் தலைமையில் நேற்று சனிக்கிழமை மாலை 2.30 மணிக்கு ஆரம்பமான நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட வலையக்கல்வி பணிபாளர் திருமதி.எஸ்.ரவிராஜா கலந்துகொண்டார்.
மேலும் உடற்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் வி.லவகுமார், மண்முனை வடக்கு கோட்டக் கல்விப் பணிப்பாளரும், தமிழ்ப்பாட உதவிக் கல்விப் பணிப்பாளரும் ஆர்.ஜே.பிரபாகரன் மற்றும் மட்டக்களப்பு 38 ஆவது தேசிய மாணவர் படையணி அதிகாரி மேஜர் கே.டி.ஆர்.என்.கபுறுங்கே ஆகியோர் விஷேட விருந்தினர்களாகவும் கலந்து சிறப்பித்தனர்.
இதன்போது 549 புள்ளிகளைப் பெற்ற பாரதி இல்லம் முதலாம் இடத்தையும், 461 புள்ளிகளைப் பெற்ற இளங்கோ இல்லம் இரண்டாம் இடத்தையும், 395 புள்ளிகளைப் பெற்ற கம்பன் இல்லம் மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டன.




