மட்டக்களப்பு நகர் பகுதியில் அமைந்துள்ள மட்/ஆணைப்பந்தி இந்து மகளிர் கல்லூரியின் 2025 ஆம் ஆண்டுக்கான இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி நேற்று சனிக்கிழமை மாலை 3.30 மணியளவில் இடம்பெற்றது.
இப்போட்டியானது கல்லூரியின் அதிபர் திருமதி. நிமலினி பேரின்பராஜா தலைமையில் இடம் பெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக பிரதிக்கல்விப் பணிப்பாளர் (கல்வி அபிவிருத்தி) திருமதி.என்.மகேந்திர குமார் கலந்துகொண்டதுடன், கௌரவ அதிதியாக உடற்கல்வி உதவிக்கல்வி பணிப்பாளர் வி.லவக்குமார், சிறப்பு அதிதிகளாக பி.எம் சுலோஜன், கோட்டை முனை விளையாட்டு கழக செயலாளர் கே.தர்மரத்னம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இதன்போது அணி நடை, உடற்பயிற்சிக் கண்காட்சி, பேண்ட் வாத்தியம் ஆகியன அனைவரது கவனத்தையும் ஈர்த்ததுடன், முதலாம் இடத்தினை 302 புள்ளிகளைப் பெற்று நளாயினி இல்லமும், இரண்டாம் இடத்தினை 286 புள்ளிகளைப் பெற்று அருந்ததி இல்லமும், மூன்றாம் இடத்தினை 257 புள்ளிகளைப் பெற்று சாரதா இல்லமும் பெற்றுக் கொண்டது.
மேலும் பாடசாலையின் ஆசிரியர்கள், பாடசாலை மாணவிகள், பாடசாலையின் பழைய மாணவிகள், மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
Beta feature
Beta feature

