சுங்க வரி செலுத்தாமல் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டு, பின்னர் உதிரிப்பாகங்கள் பொருத்தப்பட்டதாகக் கூறப்படும் SUV ரக வாகனம் ஒன்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த வாகனம் நேற்று திங்கட்கிழமை பண்டாரவளையில் வைத்து பொலிஸ் காவலுக்கு எடுக்கப்பட்டுள்ளது.
வாகனத்தின் இறக்குமதி மற்றும் அதன் பொருத்துதல் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, கம்பஹா பிராந்திய குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் கடந்த நவம்பர் 19ஆம் திகதி சந்தேகநபர் ஒருவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்தார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பஹா பிராந்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.










