மட்டக்களப்பு ஆரையம்பதியில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் துவிச்சக்கரவண்டியில் பயணித்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் ஆரையம்பதி மகா வித்தியாலயத்திற்கு அருகாமையில் இடம்பெற்ற இந்த விபத்தில் கட்டிடத் தொழிலாளி ஒருவரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் ஆரையம்பதி செல்வாநகர் பகுதியை சேர்ந்த சின்னகுட்டி என்று அழைக்கப்படுபவர் என ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
வீதியில் பயணித்துக் கொண்டிருந்த துவிச்சக்கரவண்டி மீது லொறி மோதியதினால் குறித்த நபர் சம்பவ இடத்தியேயே உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

